
கனமழை பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 11.03.2025 மற்றும் நாளை மறுநாள் 12.03.2025 ஆகிய இரண்டு நாட்கள் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனமழை தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்புகொள்ளலாம்.
கட்டணமில்லா அலைபேசி எண் - 1077,
தொலைபேசி எண் - 0461-234101,
அலைபேசி எண் - 9486454714, 9384056221 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.