• vilasalnews@gmail.com

நானும் தவெக தான்... என்ட்ரி கொடுக்கும் தூத்துக்குடி தொழிலதிபர்!

  • Share on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ஆம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.


மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் தவெக வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாக வசதிக்காக த.வெ.க. 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  120 மாவட்ட செயலாளர்கள் பல்வேறு கட்டங்களாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்து வருகிறார் . ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டத்துக்கான நிர்வாகிகளை இன்னும் அறிவிக்கவில்லை தவெக தலைமை. அதிகாரப்பூர்வமாக மா.செக்களை அறிவிப்பதற்கு முன்பாக மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்திருந்தார்கள். அதன்படி, தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக அஜிதா ஆக்னஸ் எனபவர் நியமிக்கப்பட்டிருந்தார். மேலும், இவர்தான் தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியை உள்ளடக்கிய மா.செ பதவிக்கு மூவ் செய்துகொண்டிருந்தார். 


மேலும், இதுவரைக்கும் தலைமை அறிவித்த மாவட்ட செயலாளர்களில், எங்கேயும் சாதி பார்த்தோ, பணத்தின் அடிப்படையிலோ பதவி கொடுக்கவில்லை. அதே மாதிரிதான் தூத்துக்குடிலயும் முடிவெடுப்பாங்கனு நம்பிக்கையோட இருக்கோம். கொள்கைத் தலைவர்கள்லயே இரண்டு பெண்களை வச்சிருக்காங்க. அப்படி இருக்கப்ப உழைக்கிற பெண்ணை தலைமை கட்டாயம் அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கையோடு தூத்துக்குடி மா.செ க்கு காத்திருக்கிறார் அஜிதா ஆக்னல்.


மற்றொரு புறம், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசலையே தூத்துக்குடி சாப்பிடும் அளவிற்கு தூத்துக்குடியில் தவெகவில் கோஷ்டி பூசல் உள்ளது என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு  கோஷ்டிகள் தூத்துக்குடி தவெகவில் இருக்கிறது என சொல்லும் உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள், மகளிர் தின வாழ்த்து சொல்லி நானும் தவெக தான் என்று தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே இயங்கி வரும் ஏதேனும் ஒரு கோஷ்டியோடு இணைந்து கட்சி பணியாற்ற போகிறாரா ? அல்லது இவரது தலைமையில் இன்னுமொரு புதிய கோஷ்டி அணியை உருவாக்கி இயங்க போகிறாரா என்பது மில்லன் டாலர் கேள்வி என்கின்றனர்.


ஜேகேஆர் பில்டர்ஸ், ஜேகேஆர் சிட்ஸ், ஜேகேஆர் மெட்டீரியல்ஸ், ஜேகேஆர் ஹவுசிங், ஜேகேஆர் லேண்ட் புரோமோட்டர்ஸ் என பல்வேறு தொழில் நிறுவனங்களை தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் கால் பதித்துள்ள ஜேகேஆர் குரூப்ஸ்ன் உரிமையாளர் முருகன், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,


தமிழக வெற்றிக் கழகம் மார்ச் 8 உலக மகளிர் தின வாழ்த்துக்கள். பெண்கள் இந் நாட்டின் கண்கள், பெண்களை மதிப்போம் அவர்களின் உரிமையை காப்போம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதியார் மற்றும் கழகத்தின் பொதுச் செயலாளர் அவர்கள் சார்பாக வாழ்த்துகின்றோம் இப்படிக்கு லையன் JKR ஜெ.முகருகன் ( World no 1 LION - (2019 - 2020) ) என விளம்பரம் கொடுத்து நானும் தவெக தான் என்பதை குறிப்பிட்டுள்ளது உள்ளூர் தவெகவினரை புருவம் உயர்த்தி பார்க்க வைத்துள்ளது.


ஏற்கனவே, பாலா, எஸ்டிஆர் சாமுவேல் உள்ளிட்ட தூத்துக்குடி தொழிலதிபர்கள் தவெக வில் பயணப்பட்டு அவர்களுக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி கோஷ்டி அரசியலை செய்து வரும் நிலையில், இன்னுமொரு கோஷ்டியா என்ற கேள்வி எழும் வகையிலே ஜேகேஆர் முருகன் வருகை இருக்குமோ என முனுமுனுக்கின்றனர் உள்ளூர் தவெக தொண்டர்கள்.


தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் அறிவிக்கப்படாடதால், அப்பதவியை கைப்பற்ற தங்கள் கட்சி பணிகளை தலைமைக்கு காட்ட வேண்டிய கட்டாயத்தால் அணிகளாக பிரிந்து அரசியல் செய்யக்கூடிய சூழல் இருக்கலாம். ஆனால், தலைமை அதிகாரபூர்வமாக மாவட்ட செயலாளரை அறிவித்த பின்பும் இதே போல கோஷ்டி அரசியல் தான் தூத்துக்குடியில் தொடருமா? அல்லது அனைவரும் ஒன்றிணைந்து ஆளும்கட்சிக்கும், ஆண்ட கட்சிகளுக்கும் எதிராக ஒரு போட்டி நிறைந்த அரசியல் களத்தை தூத்துக்குடியில் தவெகவினர் உருவாக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • Share on

தூத்துக்குடியில் பரிதாபம்... திடீரென உயிரிழப்பு!

தூத்துக்குடிக்கு சூப்பர் அறிவிப்பு... விமானப் போக்குவரத்து அமைச்சகம் தகவல்!

  • Share on