
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதினைப் பெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நெய்தல் யூ.அண்டோவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி T.M.S.S.S.அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அருட்பணி ச.தே.செல்வராசு தலைமை தாங்கினார். மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில், பனிமய மாதா பேராலய அதிபர் அருள்திரு.ஸ்டார்வின், அண்ணா நகர் பங்குத்தந்தை சகாயம், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் பொறுப்பாளர் அருள்திரு.சுந்தரி மைந்தன், அருந்திரு.லடிஸ்லாஸ், இரத்தினபுரம் பங்குத்தந்தை அருள்திரு.அமலதாஸ், அருள்திரு.விமல்ஜன் ஆகியோர் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியரைப் பாராட்டினர்.
இந்நிகழ்வில், அன்னை பரதர் நலத் தலைமைச் சங்கத்தின் தலைவர் சேவியர் வாஸ் மற்றும் நிர்வாகிகள், புன்னைக்காயல் ஊர்க்கமிட்டி தலைவர் குழந்தை, முன்னாள் தலைவர்கள், வீரபாண்டியன் பட்டினம் ஊர்த் தலைவர் பெயிட்டன் ராயர் மற்றும் நிர்வாகிகள், கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோமால்டு, குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் தலைவர் ஹெர்மன் கில்டு, மணப்பாடு வினோ, வேம்பாறு தேவானந்த், ஆலந்தலை அலன் ஹார்ட்டி, ஸீ சைடு ரோட்டரியின் ஜூட்ரன், செயின்ட் தாமஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜேம்ஸ், புனித தோமையார் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆஸ்கர், வெனான்சிஸ் ரொட்ரிக்ஸ் ஞானதூதன் வாசகர்கள், நெய்தல் எழுத்தாளர்கள் & வாசகர்கள் இயக்க நிர்வாகிகள், புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அரசு விருது பெற்ற ஆசிரியரைப் பாராட்டினர்.
முன்னதாக வந்தோரை ஆசிரியை பிரபாவதி மெத்தோடியஸ் வரவேற்றார். ஆசிரியர் அமிர்தராஜ் இறைவணக்கம் பாட, கவிஞர் கமல லியோனா வாழ்த்துப்பா வாசித்தார். தலைமையாசிரியர் ஸ்பெல்மேன் நன்றியுரை கூற, நிகழ்ச்சிகளை வ.உ.சி. கல்லூரியின் பேராசிரியர் ஜாக்சன் தொகுத்து வழங்கினார். விருதுபெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நெய்தல் யூ.அண்டோ ஏற்புரை வழங்கினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மறை மாவட்டத்தின் ஞானதூதன் இதழின் பொறுப்பாசிரியர் அருள்திரு.பெஞ்சமின் டி.சூசா மற்றும் நெய்தல் எழுத்தாளர்கள் & வாசகர்கள் இயக்கத்தினர் செய்திருந்தனர்.