
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியிலி வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவருடைய மனைவி எலிசபத் ராணி. இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர் நிறைமாத கர்ப்பணியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மகப்பேறுவிற்கு கடந்த 26 ஆம் தேதி சேர்ந்துள்ளார்.
கடந்த 27ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குழந்தைகள் நலப் பிரிவில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற பொழுது வழுக்கி விழுந்துள்ளார்.
இதில் மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் கிடந்த நிலையில், அவரது தாயார் அவரை தேடிப் பார்த்த நிலையில் கழிவறைக்கு சென்று பார்த்த பொழுது அவர் மயக்கமடைந்து கிடந்தார். அங்கிருந்து மற்றவர்களை உதவியுடன் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். எலிசபத் ராணி உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எலிசபத் ராணி 2 நாட்களிலும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனை கழிவறையில் எலிசபத் ராணி கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்திவருகின்றனர்.