
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தின விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாவட்ட நாடார் பேரவை மகளிர் அணி தலைவி சந்திரா ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் இயேசு செல்வி, ஜெப ராணி, ராஜாத்தி, ராதா, லட்சுமி, சுப்புலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவனரும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் கலந்துகொண்டு, பெருந்தலைவர் காமராஜர் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மகளிர் தின கேக் வெட்டி துப்புரவு மகளிர் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், மாவட்ட செயலாளர் டேனியல்ராஜ், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, சிறப்பு பேச்சாளர் பசுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு.முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மாலைசூடி ராஜா, மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் சங்கரன், மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகன், மாநகர அவைத்தலைவர் மதியழகன், பொருளாளர் சந்தனகுமார், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி, நந்தகுமார் மகேஸ்வரன், காமராஜ், ஜெயபால், செல்வராஜ், ராமலிங்கம், நடராஜன், மதியழகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.