• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு இன்று நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 46 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த 06.01.2025 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று நிறைவு பெற்றது. மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் வைத்து ஊர்க்காவல் படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பயிற்சி நிறைவு விழா கவாத்து அணிவகுப்பு  மரியாதையை செலுத்தி நிறைவு செய்தனர். 


இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அனைவருக்கும் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.  விழாவில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  ஆறுமுகம், நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  சுனைமுருகன், மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி  பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா

விளாத்திகுளம் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற திமுக மகளிர் அணியினர்

  • Share on