• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... இணைப்புகள் ரத்து ஆகலாம்!!

  • Share on

பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது பயனாளி விபரங்களை (e-KYC)  உடனடியாக புதுப்பிக்க  வேண்டும் என தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 


பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் பலர், தங்களது முதல் எரிவாயு உருளைக்கு பிறகு நீண்ட காலமாக மாற்று எரிவாயு உருளை பெறாமல் உள்ளனர்.  இவர்களுக்கு பாரத்  பெட்ரோலியம் நிறுவனத்திடமிருந்து தனித்தனியாக நினைவூட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது.


எனவே இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் பயனாளிகள் சம்பந்தப்பட்ட எரிவாயு முகவரிடம் தங்களது ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது  பயனாளி விபரங்களை (e-KYC)  உடனடியாக புதுப்பிக்க கேட்டுக்  கொள்ளப்படுகிறது,  தவறும் பட்சத்தில் உஜ்வலா திட்டத்தின் கீழ் இணைப்பு  பெற்ற பயனாளிகளின் எரிவாயு இணைப்புகள் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்,   தெரிவித்துள்ளார்.

  • Share on

விளாத்திகுளம் அருகே ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலங்களை அளவீடு செய்ய புது வழி!

  • Share on