
தமிழ்நாடு அரசு சார்பில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் வேலைநாடுநர்கள் பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில், இதுவரை மாநில அளவில் 725 தனியார்துறை நிறுவனங்கள் 43 துறைகளில், 31553 பணிக்காலியிடங்களை இதுவரையில் உள்ளீடு செய்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்த மட்டில் 214 தனியார்துறை நிறுவனங்கள், 25 துறைகளில், 1786 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in இந்த இணையதள முகவரியில் பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற இயலும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 9677734590 எண்ணினை தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.