
வைப்பார் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைப்பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, வைப்பார் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சிலுவைமணி கிரேஸ் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர் சிவசக்தி முன்னிலை வகித்தார்
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு தேர்வுக்கு தேவையான கல்வி உபகரணப் பொருட்களை வைப்பார் வில்லாயுத முடையார் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக அதன் தலைவர் ஹரிஹரன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், கிராம பெரியவர்கள், கிராம பொதுமக்கள், பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.