• vilasalnews@gmail.com

என்னையா மேஜிக் பன்னுறீங்க... தூத்துக்குடியா இது!

  • Share on

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் முடிந்து உள்ளது. கடந்த வருடம்தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது, வெளிப்புற கட்டுமானம் 100% முடிந்த நிலையில், உட்புறம் மெஷின்களை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.


தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற துவங்கி உள்ளது. தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. மேலும், சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் தான் மாநிலத்திலேயே அதிக சிப்காட் தொழில் பூங்காக்கள் இருக்கும்.


சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரு நிறுவனங்கள், ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.


இதற்காக, தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வின்பாஸ்ட் தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம், 2024 ல் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கி, வெளிப்புற கட்டுமானம் 100% முடிந்த நிலையில், உட்புறம் மெஷின்களை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.


முதல் கட்டமாக 1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, இதில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளதாம்.


மேலும், இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் 40 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் தான் உற்பத்தி ஆகின்றன. அவ்வாறு இருக்கும் நிலையில் டெஸ்லா ஆலை தமிழகத்தில் அமைக்க தமிழக அரசு சார்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடி மற்றும் ஓசூர் பகுதிகள் பரிசீலனையில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து டெஸ்லா நிறுவன அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் 2வது பெரிய நகரமும் ஆன சென்னைக்கு இணையாக தூத்துக்குடி வளர்ந்து வருவது உள்ளூர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் அடியெடுத்து வைக்கிறதா எலான் மஸ்க்கின் டெஸ்லா தொழிற்சாலை?

தூத்துக்குடியில் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு சூப்பர் வாய்ப்பு... ஆட்சியர் இளம்பகவத் தகவல்!!

  • Share on