• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அடியெடுத்து வைக்கிறதா எலான் மஸ்க்கின் டெஸ்லா தொழிற்சாலை?

  • Share on

அமெரிக்க முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்கின் டெஸ்லா தொழிற்சாலை தமிழகத்தில் அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு தமிழகத்தில் அமைக்க தூத்துக்குடி உள்ளிட்ட 2 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


அமெரிக்க முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. மின்சார கார் உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலையை தமிழகத்தில் இழுக்கும் முயற்சியில் மாநில அரசு தொடர்ந்து தீவிரம் கட்டி வருகிறது. 


சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்க சென்றிருந்த போது எலான் மஸ்க் உடன் சந்தித்து பேசினார். தொடர்ந்து இந்நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றது.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் டெஸ்லா கார் விற்பனை மற்றும் சேவை மையம் தொடங்குவதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் டெஸ்லா மின்சார கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கவும் டெஸ்லா நிறுவனத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அந்நிறுவனத்தின் முதலீட்டை இழுக்கும் முயற்சியில் ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக ஆந்திர அரசு நிலம் மற்றும் மின்சார வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி டெஸ்லா முதலீட்டை இழுக்கும் நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலீடு செய்ய உள்ளது என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் இருந்து வருகிறது.


அதே வேளையில் தமிழகத்தில் முதலீடு செய்ய டெஸ்லாவை இழுக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தொழில்துறையில் தனி குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் டெஸ்லா நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் தமிழக உயர்மட்ட குழு சார்பில் அமெரிக்கா சென்றிருந்த போது முதலீட்டை ஈர்க்க இது தொடர்பாக டெஸ்லா நிறுவனத்திடமும் பேசியது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் 40 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் தான் உற்பத்தி ஆகின்றன. அவ்வாறு இருக்கும் நிலையில் டெஸ்லா ஆலை தமிழகத்தில் அமைக்க தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். டெஸ்லா நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடி மற்றும் ஓசூர் பகுதிகள் பரிசீலனையில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து டெஸ்லா நிறுவன அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

தூத்துக்குடியில் காலையிலேயே கேட்ட துப்பாக்கி சத்தம்... அதிரடி காட்டும் எஸ்பி ஆல்பர்ட் ஜான்!!

என்னையா மேஜிக் பன்னுறீங்க... தூத்துக்குடியா இது!

  • Share on