
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளத்தில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 -வது பிறந்த நாளை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் ஆண்கள் - பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமை வகித்தார்.
இதில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,
புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுப்பாண்டியன், எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரரநாராயணன்,
பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் நடராஜன், தங்கமாரியம்மாள், தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பாலமுருகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் உட்பட மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.