• vilasalnews@gmail.com

தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம்!

  • Share on

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4 வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது : 


சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4 வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காரைக்குடியில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12606) நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகுதி நேரமாக தாம்பரம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. 


அதே போல, மன்னார்குடியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16180) வருகிற 8 ஆம் தேதி பகுதி நேரமாக தாம்பரம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.


திருநெல்வேலியில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12632) 8 ஆம் தேதி பகுதிநேரமாக செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், மண்டபத்தில் இருந்து மாலை 5.55 மற்றும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16752, 22662) பகுதிநேரமாக தாம்பரம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.


தூத்துக்குடியில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் (12694) 8 ஆம் தேதி பகுதிநேரமாக மாம்பலம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், புதுச்சேரியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் பயணிகள் ரயில் பகுதிநேரமாக தாம்பரம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.


எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635) நாளை மற்றும் நாளை மறுநாள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும். அதே போல, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12759) 9 ஆம் தேதி தாம்பரத்திற்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும். 


எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22661) 9 ஆம் தேதி எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும்.


ஆந்திர மாநிலம் காக்கி நாடா துறைமுக ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (17644) 8 ஆம் தேதி கொருக்குப்பேட்டை, பெரம்பூர், அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது. 


அதே தேதியில், காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (17652) மேல்பாக்கம், காஞ்சிபுரம், வழியாக இயக்கப்படும். இந்த ரயில் அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது.


எழும்பூரில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20665) நாளை மற்றும் நாளை மறுநாள் 15 நிமிடம் தாமதமாக எழும்பூரில் மதியம் 3 மணிக்கு புறப்படும்" இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

விளாத்திகுளத்தில் இலவச ஆட்டோ... கட்டணம் கொடுக்க தேவையில்லை : மார்கண்டேயன் எம்எல்ஏ ஏற்பாடு!

விளாத்திகுளத்தில் மின்னொளி கபடி போட்டி : கனிமொழி எம்பி., அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தனர்!

  • Share on