
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாபெரும் மின்னொளி கபடி போட்டி மற்றும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெறுகிறது.
மார்ச் 5 மற்றும் 6 ஆம் தேதி மாலை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியே மின்னொளி கபடி போட்டி நடைபெறுகிறது. மார்ச் 7ஆம் தேதி காலை வெள்ளிக்கிழமை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெறுகிறது.
இப்போட்டிகளை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமை வகிக்கிறார்.
ஆண்கள், பெண்களுக்கான தனித்தனியாக நடைபெறும் மின்னொளி கபடி போட்டியில், வெற்றி பெறும் அணிகளும், தனித்தனியாக முதல் பரிசாக 72 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 60 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 40 ஆயிரம் ரூபாயும், நான்காவது பரிசாக 40 ஆயிரம் ரூபாயும், ஐந்தாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், ஆறாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், ஏழாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், எட்டாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
சிறந்த கபடி பிடியாளருக்கு ரூ.10 ஆயிரம், சிறந்த ரைடருக்கு ரூ.10 ஆயிரம், சிறந்த ஆல் ரவுண்டருக்கு ரூ.10 ஆயிரம் என ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
அதே போல் நடு மாடு, சின்ன மாடு என இண்டு பிரிவுகளுக்காக நடை பெறும் மாட்டு வண்டி பந்தயத்திற்கு, நடு மாட்டில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.72,000, இரண்டாவது பரிசாக ரூ.60,000, மூன்றாவது பரிசாக ரூ. 50,000, நான்காவது பரிசாக ரூ.40,000 வழங்கப்படுகிறது.
சின்ன மாட்டில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாவது பரிசாக ரூ.40,000, மூன்றாவது பரிசாக ரூ. 30,000, நான்காவது பரிசாக ரூ.20,000 வழங்கப்படுகிறது. சிறந்த சாரதி மற்றும் பின்சாரதிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
விளாத்திகுளத்தில் நடைபெறும் மாபெரும் மின்னொளி கபடி போட்டி மற்றும் மாட்டு வண்டி எல்லை பந்தயத்திற்கு விளாத்திகுளம் தொகுதி திமுகவினர் 10 லட்சத்திற்கும் அதிகமாக பரிசு தொகைகளை வழங்கி, முதல்வரின் பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடுவது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை தந்துள்ளது மட்டுமல்லாது மாவட்டத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மேலும், விளாத்திகுளத்தில் இருந்து மின்னொளி கபடி போட்டி நடைபெறும் அம்மாள் நகர் கலைஞர் திடலுக்கு செல்ல பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் இலவசமாக ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் முன்னெடுப்பில், நடைபெறும் முதல்வர் பிறந்தநாள் விளையாட்டு போட்டி நிகழ்ச்சியால், விளாத்திகுளமே திருவிழா கோலம் கொண்டுள்ளது.