
இன்று கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கிய நிலையில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். இந்த நிலையில் இன்று (5 ஆம் தேதி) புதன்கிழமை கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதால் அதிகாலை தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதன் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் நாளை ( 6ம் தேதி) மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.