• vilasalnews@gmail.com

தூத்துக்குடி துணிச்சல் காவலருக்கு எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

  • Share on

செல்போனை பறித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்ற நபரை தன்னுயிரையும் பொருட்படுத்தாது விரட்டிப் பிடித்து கைது செய்த சிப்காட் காவல் நிலைய காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


கடந்த 02.03.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிஞ்சிநகர் டவர் அருகில், அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை 2 பேர் வழிமறித்து அவரிடம் தகராறு செய்து மிரட்டி செல்போனை பறித்து விட்டு தப்பிச் செல்லும் போது, அவ்வழியாக வந்த சிப்காட் காவல் நிலைய காவலர் பார்த்திபன், தன்னுயிரையும் பொருட்படுத்தாது மேற்படி 2 பேரையும் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து அவர்களை கைது செய்து  சிறப்பாக பணி செய்துள்ளார்.


செல்போனை பறித்து விட்டு தப்பிச்சென்றவர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாது விரட்டி பிடித்து சிறப்பாக பணிபுரிந்த சிப்காட் காவல் நிலைய காவலர் பார்த்திபன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் நேற்று (03.03.2025) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடி கொத்தனாரை தாக்கி கொல்ல முயற்சி : 4 பேர் கைது!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு... தூத்துக்குடி ரயிலில் மாற்றம்!

  • Share on