• vilasalnews@gmail.com

மஞ்சள் காய்ச்சல் நோய்த்தாக்கம்.... தூத்துக்குடி மக்களுக்கு கலெக்டர் கொடுத்த உடனடி தகவல்!

  • Share on

ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோய்த்தாக்கம் காணப்படுகிறது.


எனவே, மஞ்சள் காய்ச்சல் நோய் பரவலை தடுக்க இந்தியாவிலிருந்து அந்நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அந்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 


இந்தியாவில் மஞ்சள் காய்ச்சல் விவரங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் குறித்த விவரங்களை https://ihope.mohfw.gov.in/index.php என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 


தமிழ்நாட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்து உள்ள கீழ்காணும் 3 மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் தடுப்பூசி மையங்களில் மட்டும் கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். 

 

1) அசல் கடவுச்சீட்டு

2) சுய விவரங்கள் அடங்கிய தொகுப்பு 

3) மருத்துவ விவரங்கள் (ஏதேனும் இருப்பின்)

 

1.பன்னாட்டு தடுப்பூசி மையம் மற்றும் கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம், கிண்டி, சென்னை 


2.துறைமுக சுகாதார நிறுவனம், இராஜாஜி சாலை, சென்னை. 


3.தூத்துக்குடி மாவட்டத்தில், துறைமுக சுகாதார அதிகாரி, துறைமுக சுகாதார அமைப்பு எண்.பி- 20, உலக வர்த்தக அவென்யூ, புதிய துறைமுகம், தூத்துக்குடி என்ற முகவரியில் அனைத்து செவ்வாய்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12.00 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிக்கான கட்டணம் ரூபாய்.300/- ரொக்கமாக மட்டும் செலுத்தப்பட வேண்டும். 


எனவே தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் எவரேனும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த தேவையிருப்பின் துறைமுக சுகாதார அதிகாரியின் மேற்கண்ட முகவரியில் உரிய நேரத்தில் சென்று மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்தி பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத்  கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share on

தூத்துக்குடி கொத்தனாரு பாடல்... காவல்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

21 முதல் 24 வயதுடைய வேலையில்லாத தூத்துக்குடி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

  • Share on