
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தூத்துக்குடியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்ற இளைஞரின் டான்ஸ்சை பார்த்து நடுவர்கள் வியந்திருக்கிறார்கள்.
டிவி சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அடிதட்டு மக்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறார்கள். அதற்கு தொலைகாட்சி நிறுவனங்கள் பல வகைகளிலும் உதவி செய்து வருகிறது.
அந்த வகையில், ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் சினிமாக்களிலும் என்ட்ரி கொடுக்கிறார்கள். அதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பலர் போட்டி போட்டு வருகிறார்கள்.
அந்த வரிசையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் மீனவர்கள், வயலில் வேலை செய்பவர்கள், பன்றி வளர்ப்பவர் உட்பட பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில், தற்போது வெளியான ப்ரோமோவில் கலந்து கொண்ட நபர் பலரையும் வியக்க வைத்திருக்கிறார். அவரின் சொந்த ஊர் தூத்துக்குடி.
தூத்துக்குடி என்றால் கடலும் உப்பளமும், வீரமும், கோபமும் தான் பலருக்கும் ஞாபகம் வரும். ஆனால் எங்களுக்கு தனித்திறமைகளும், டான்ஸ்சும் அபாரம் என்று தூத்துக்குடி இளைஞர் ஒருவர் நிரூபித்து இருக்கிறார். அவர் டான்ஸ் குறித்து எந்த பயிற்சியும் முறையாக கற்றுக் கொள்ளவில்லையாம். டிவியில் ஒளிபரப்பாகும் பாடல்கள் மற்றும் டான்ஸ்சை பார்த்து தான் கற்றுக் கொண்டதாக கூறி இருக்கிறார்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஆடிஷனில் கலந்து கொண்ட இந்த போட்டியாளர் 100 நிமிடங்களுக்கு மேலாக டான்ஸ் ஆடி அசத்தி இருக்கிறார். அதிலும் மைக்கேல் ஜாக்சன் போல இவருடைய டான்ஸ் அங்கிருந்த நடுவர்களை வியக்க வைத்திருக்கிறது. இதற்காக முறையாக கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் இவருடைய அசாத்திய திறமையை பார்த்து வியந்து போய் எல்லோரும் பாராட்டி இருக்கிறார்கள்.
அப்போது, இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் என்னுடைய அப்பாவை யாரெல்லாம் கிண்டல் அடிச்சாங்களோ அவங்க முன்னாடி எங்க அப்பா தலை நிமிர்ந்து நடக்கணும் அதுக்காகத்தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று உறுதி கொள்கிறார். அப்போது பாபா பாஸ்கர், "நீ தில்லை நடராஜன் என்று அவருடைய பெயரை வச்சிருக்காடா இந்த பெயருக்கு எந்த கெடுதலும் இல்லாமல் நீ சூப்பரா பெர்பார்மன்ஸ் பண்ணுன" என பாராட்டுகிறார்.
அப்போது தில்லை நடராஜன் பேசும் போது, என்னுடைய அப்பாவிற்கு நான் வேலைக்கு போவது தெரியாது. நான் எங்க அப்பாவுக்கு தெரியாம தினமும் காலையில் மார்க்கெட்டுக்கு வேலைக்கு போவேன் என்று சொல்லவும் இதையெல்லாம் டிவியில் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய அப்பா ஓடி வந்து தில்லை நடராஜனை கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.
அப்போது என்னுடைய மகன் வேலைக்கு போவதே எனக்கு தெரியாது நான் இன்னும் நாலு மணி நேரம் வேலை பார்க்க சொன்னா கூட பார்ப்பேன். என்னுடைய மகனை இந்த வயதிலேயே நான் வேலைக்கு அனுப்ப மாட்டேன் என்று அவர் சொல்ல, அதற்கு தொகுப்பாளர் விஜய் இவர்தான் சிறந்த அப்பா என்று சொல்லி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து தில்லை நடராஜன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கோட்டை தன்னுடைய அப்பாவிற்கு போட்டு அழகு பார்க்கிறார். இந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.