• vilasalnews@gmail.com

ஆதனூரில் இருந்து சீறிப்பாய்ந்த ரேக்ளா காளைகள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூர்  கிராமத்தில் 34 வது ஆண்டு மஹாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 


தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, மதுரை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.


ஆதனூர் - எப்போதும் வென்றான் சாலையில் பூஞ்சிட்டு, தேன்சிட்டு என்று இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை ஸ்ரீஜெகவீரமொட்டையசாமி ஆலக்குழு நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.


இப்போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை நெடுகிலும் கைதட்டி மாட்டு வண்டி வீரர்களை உற்சாகப்படுத்தி ரசித்தனர். முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள், சாரதி, பின்சாரதிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டது. 


இதற்கான ஏற்பாடுகளை, ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படையினர், ஸ்ரீஜெகவீரமொட்டையசாமி ஆலக்குழுவினர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளராக பரதவரை அறிவிக்க வேண்டும் : திமுக தலைவருக்கு கோரிக்கை!

தூத்துக்குடியில் இந்த ஏரியாவில் ரூட்டை மாத்தி போங்க!

  • Share on