• vilasalnews@gmail.com

ரூட் கிளியர் - ஹேப்பி மூடில் ஓட்டப்பிடாரம் மோகன்!

  • Share on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் களைகட்ட துவங்கிய நிலையில், தேர்தலில் போட்டியிட தங்களது கட்சி தலைமையிடம் முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் காய் நகர்த்தி வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான மோகன் தீவிரம் காட்டி வருகிறார். அமைச்சர் கடம்பூர் ராஜுவின் ஆதரவும்,  தலைமையின் தேர்வும் மோகன் தான் என கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் வந்தால் ஓட்டப்பிடாரம் தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்படுவது உறுதி என்ற நிலை கானப்பட்டதால்,  தனக்கு சீட் கிடைப்பதில் சிரமம் என்று எண்ணி முன்னாள் எம்எல்ஏ மோகன்  கலக்கத்தில் இருந்து வந்த நிலையில், புதிய தமிழகம் கட்சி திமுக கூட்டணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், தனக்கான ரூட் கிளியர் ஆகிவிட்டது என்று மோகன் உற்சாகத்தில் இருக்கிறாராம்.

மேலும், ஓட்டப்பிடாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய தமிழகத்தின் அரசியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம், ஒருத்தர் விடியலைத் தருகிறேன் என்று சொல்லி வருகிறார். அவர் அப்பா ஐந்து முறை ஆண்டபோது விடியல் வரவில்லையா? இன்னொருத்தர் வெற்றிநடை போடும் தமிழகம் என்று சொல்லி வருகிறார். யார் வெற்றி நடைபோடுகிறார்கள்? யார் வளர்ந்திருக்கிறார்கள்?” 

"நாம் எப்போதும் கோரிக்கை வைக்கும் இடத்திலேயே இருக்கக் கூடாது. நாம் அதிகாரத்துக்கு வந்து எல்லாருக்கும் செய்ய வேண்டும். தலைவர் இருமுறை இந்த சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்கும் செய்திருக்கிறார். அரசியல் அதிகாரம் சாதாரணமாக வந்துவிடாது. யாரும் நம் கையில் தூக்கிக் கொடுத்துவிட மாட்டார்கள். இதையெல்லாம் உணர்ந்து புதிய தமிழகத்தின் கொள்கையை உணர்ந்து இளைஞர்கள் திரள வேண்டும். 

புதிய தமிழகம் மீண்டும் ஓட்டப்பிடாரத்தில் வரலாறு படைக்க வேண்டும். 96 வெற்றி மீண்டும் திரும்ப வேண்டும். நமது சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருந்து நமக்காக வேலை செய்தால் பிற சமுதாயத்தினரும் நமக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறார்கள். எனவே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்" என்று பேசினார். எனவே வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடாத பட்சத்தில், அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி வேட்பாளராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இல்லாத பட்சத்தில் தனித்து போட்டியிடக்கூடும் என்பதால், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ரூட் கிளியர் என ஹேப்பி மூடில் இருக்கிறாராம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான மோகன் என்கிறார்கள்.




  • Share on

திருச்செந்தூரில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தனியார் விடுதிகள், வணிக கடைகள் - நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு வரும் சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் – சரத்குமார்

  • Share on