
தூத்துக்குடி அருகே அரிவாளால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் ராஜாவின்கோயிலைச் சோ்ந்த ஞானதுரை மகன் பிரவீன் செல்வகுமாா் (26). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த செளந்திரபாண்டி மகன் இம்மானுவேல் விஜயசீலன்(25), காமராஜா் நகரைச் சோ்ந்த ஆா்த்தி (25) ஆகியோருக்கும் இடையே பொங்கல் விளையாட்டுப் போட்டியின்போது முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், இவா் கடந்த 18ஆம் தேதி தூத்துக்குடி அருகே காயலூரணியில் உள்ள கோயில் அருகே சென்றபோது, விஜயசீலன், ஆா்த்தி உள்ளிட்ட சிலா் பிரவீன் செல்வகுமாரை அரிவாளால் வெட்டி, கம்பால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த பிரவீன் செல்வகுமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் புதியம்புத்தூா் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தாா். இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரவீன் செல்வக்குமாா் நேற்று உயிரிழந்தாா். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.