
ஆதனூர் கிராமத்தில் செல்வவிநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்கஈஸ்வரர் திருக்கோவிலில் 34 வது ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா இன்று நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், ஆதனூர் கிராமத்தில், இன்று பிப்.,26 மற்றும் நாளை 27ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள், செல்வ விநாயகர், பால விநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்க ஈஸ்வரர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவன், காலபைரவர், ஜலதுர்க்கை, நவக்கிரகங்கள், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், கோட்டையில் அமைந்துள்ள வேத நாராயணர், உத்தண்டராய சுவாமி, ஜெகவீர மொட்டைய சாமி, இருளப்பசாமி, கருப்பசாமி, பத்திரகாளி, பேச்சியம்மன், மாரியம்மன், லாட சன்னிகர், வைரவன் ஜெகவீர சக்கதேவிக்கும் மகாசிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, காலை அபிஷேக பூஜையும், மதியம் அலங்கார பூஜையும், இரவு திருவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவும் நடைபெறுகிறது. பின்னர் முள்ளு பட்டி மாரிமுத்து குழுவினரின் நாதஸ்வரம் நையாண்டி மேளத்துடன் மதுரை கரக நடிகை எஸ்.கே.மாரியம்மாள் குழுவினரின் கரகாட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு பெருமாள் கோவிலில் இருந்து ஆலய பரிவாரங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு முப்பிரி தீவட்டு எடுத்து வருதல் உச்சிக்கால பூஜையும் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக இரவு 1 மணிக்கு பழப்பெட்டிகள் அர்ப்பணம் நிகழ்ச்சியும், இரவு 2 மணிக்கு ஜெகவீர மொட்டைய சுவாமிகள் அருள்வாக்கும் சொல்லப்படும்.
தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி மறுநாள் காலை 7 மணிக்கு பெருமாள் கோவிலில் இருந்து நேமுக பக்தர்களின் கயிறு குத்துதல், கிராமிய கலை வீர விளையாட்டுயான சிலம்பாட்டம், ஒயில் கும்மி நடைபெறுகிறது.இரவு 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 2 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெறுகிறது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதனூர் ஊர் மக்கள் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஜெகவீரமொட்டைய சுவாமி ஆலயக்குழு தலைவர் ஜெயகிருஷ்ணன், செயலாளர் முருகேசன் என்ற ஊமத்துரை, பொருளாளர் ஆண்டிராஜ் உள்ளிட்டோர் செய்துள்ளனர்