
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக E-Challan வாயிலாக பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கான கட்டணத்தை 90 நாட்களுக்குள் தவறாது செலுத்தப்பட வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் வாகனம் தொடர்பான எவ்வித பணிகளும் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் செய்ய இயலாது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவிக்கை எண். G.S.R. 584(E) நாள் 25.02.2020-ன்படி போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளால், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக E-Challan வாயிலாக பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கான கட்டணத்தை 90 நாட்களுக்குள் தவறாது செலுத்தப்பட வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் வாகனம் தொடர்பான எவ்வித பணிகளும் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் செய்ய இயலாது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், Parivahan Website-ல் நாளது தேதி வரையில் தங்களது அலைப்பேசி எண்களை பதிவு செய்யாத வாகன உரிமையாளர்கள் ஆதார் அட்டை அடிப்படையில் உடனடியாக Parivahan Website-60266 Online Service - Vehicle related Service-60266 Mobile Number Update (Aadhaar Based)-ல் பதிவு செய்திடுமாறும் அவ்வாறு செய்ய இயலாதபட்சத்தில், வாகன உரிமையாளர் அலைப்பேசிக்கான உரிய அத்தாட்சியுடன் சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.