• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் கைது!

  • Share on

குரும்பூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார் குடியிருப்பு கிராமத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 6 மாதமாக தற்காலிக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராமன் (42). இந்த நிலையில் அதே பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ராமன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.


இதுபற்றி மாணவி, தனது தாயாரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவிக்கு ஆசிரியர் ராமன் மீது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ராமனை போலீசார் கைது செய்தனர்.


  • Share on

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 26ம் தேதி மஹா சிவராத்திரி திருவிழா : சாக்தஸ்ரீ சற்குரு ஸ்ரீபிரத்தி சுவாமிகள் அழைப்பு

தூத்துக்குடியே ஆடிப்போச்சு.. வீட்டில் நுழைந்து பெண்ணை மீண்டும் மீண்டும் சீரழித்த 2 காம கொடூரன்கள்!!

  • Share on