• vilasalnews@gmail.com

தூத்துக்குடி காவலர் பல்பொருள் அங்காடியில் வேலை!!

  • Share on

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு காவலர் பல்பொருள்  அங்காடியில் தற்காலிக பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு காவல்துறையினரின் வாரிசுதாரர்கள், மற்றும் காவல் ஆளிநர்களின் கணவன் அல்லது மனைவி விண்ணப்பிக்கலாம்.


மேற்படி தற்காலிக பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.


இப்பணிக்கான விண்ணப்ப படிவத்தை ஆயுதப்படை காவலர் பல்பொருள் அங்காடியில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் காவலர் பல்பொருள் அங்காடியில் வரும் 27.02.2025  தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு 9442169589 என்ற எண்ணிற்கு whatsapp செய்யலாம்.

  • Share on

ஏப்.,18ல் தமிழகத்தில் மதுபானக் கடைகள் மூடப்படுமா? தூத்துக்குடியில் எழும் குரல்!

தூத்துக்குடியில் பாலியல் புகார் : தலைமறைவானவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

  • Share on