
கிறிஸ்தவர்களால் தியாக நாளாகக் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி இயேசு கிறிஸ்துவின் துன்பத்தையும் மரணத்தையும் கௌரவிக்கும் வகையில் உண்ணாவிரதத்தையும் மதுவிலக்கையும் கடைப்பிடிக்கிறது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மது அருந்துபவர்களுக்கான பல மீட்பு மையங்களை நடத்தும் பரிசுத்த அமலோற்பவ மது விலக்கு சபையின் செயலாளர் அருட்தந்தை ஜெயந்தன் டி கிரேஸ், புனித வெள்ளி அன்று மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து அரசிற்கு கோரிக்கை வைத்து வருகிறார்.
தியாகத் திருநாளான இந்த நாளில் அரசு நடத்தும் மதுபானக் கடைகளை மூடுவது மரியாதைக்குரியதாகவும், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதாகவும் இருக்கும்.
இயேசுவின் துன்பம் பொதுமக்களுக்கு அமைதியையும் பச்சாதாபத்தையும் மட்டுமே வெளிப்படுத்துவதால், அந்த நாள் மதுவிலிருந்து விடுபட வேண்டும். தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் முழுமையான நல்வாழ்வு, அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக புனித வெள்ளி நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படுவது அவசியம் என்றும், அண்டை மாநிலமான கேரளாவில் புனித வெள்ளி அன்று மதுபான விற்பனையை தடை செய்துள்ளதை மேற்கோள் காட்டி, புனித வெள்ளி அன்று மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து அரசிற்கு கோரிக்கை வைத்து வருபவர்களில் முதன்மையானவர் அமலோற்பவ மது விலக்கு சபையின் செயலாளர் அருட்தந்தை ஜெயந்தன் டி கிரேஸ்.
இது தொடர்பாக தூத்துக்குடி மறைமாவட்டம் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று ( பிப்.,24 ) அளித்துள்ள கோரிக்கை மனுவில்,
"வருகிற மார்ச் 5ஆம் தேதி கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பமாகிறது. இயேசு இறந்த புனித வெள்ளி (ஏப்.18ஆம் தேதி) தினத்தை தியாகம் மற்றும் அமைதியின் நாளாக கிறிஸ்தவ மக்கள் கடைபிடித்து வருகின்றனோம்.
ஆகவே, ஏப்.18ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். "காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு. சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் உழைப்பாளர் தினம்”, போன்ற சிறப்பு நாள்களோடு புனித வெள்ளி நாளையும் சேர்த்து சட்ட மன்றத்தில் கொள்கை மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.