• vilasalnews@gmail.com

புதியம்புத்தூரில் முதல்வா் மருந்தகம் : சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on

மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.


அதனைத்தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதியம்புத்தூரில் கூட்டுறவு சங்கம் சார்பில் துவக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்து முதல்  மருந்து விற்பனையை துவக்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆனந்த், யூனியன் ஆணையாளர் சசிகுமார், கூட்டுறவு சார்பதிவாளர் சுடலைமணி லட்சுமிதேவி, கூட்டுறவு செயலர் கஸ்தூரி, வருவாய் ஆய்வாளர் ஸ்ரீரங்கபெருமாள், ஊராட்சி செயலர் உத்திரக்கனி, ஒன்றிய திமுக துணை செயலாளர் சிவன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை


ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காமராஜ், ஒன்றிய வர்த்தக அணி காளியப்பன், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெயா,  நகர செயலாளர்  லிங்கராஜ், நெசவாளரணி ஈசன் சுரேஷ் , புதியம்புத்தூர் கிளைச் செயலாளர்கள் சற்குணபாண்டியன், பாலகுருசாமி, ராஜாவின் கோவில் கிளை செயலாளர் சிவமுருகன், இளைஞரணி பார்த்திபன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஆசியாவையே கலக்கிய தூத்துக்குடி வீரர்... இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

ஏப்.,18ல் தமிழகத்தில் மதுபானக் கடைகள் மூடப்படுமா? தூத்துக்குடியில் எழும் குரல்!

  • Share on