
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாத்திமா நகர் ஆலயம் முன்பு பாண்டியாபதி தேர்மாறன் கல்லறை மீட்புக் குழு மற்றும் அனைத்து பரதவ ஊர்க் கமிட்டி சார்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு தூத்துக்குடி மாநகர மக்களிடையே பதட்டத்திற்கு உண்டாக்கி, மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வரும் நபர்கள் குறித்தும், அவர்கள் மீது நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட மக்களினுடைய ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் செயல்படும் இனத் துரோகிகள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். வரும் காலங்களில் இதேபோல் தூத்துக்குடி மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு சில நயவஞ்சகர்கள் மீண்டும் தலையெடுக்காதவாறு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிக விரைவில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் அனைத்து அமைப்புகள் சார்ந்த ஒன்றிணைத்து தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம். ஆலைக்கு ஆதரவாக எந்த இந்த விஷமிகள் வந்தாலும் அந்த விஷமிகளை ஒட்டுமொத்த நகர மக்களின் பேராதவருடன் வீழ்த்துவோம்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு மாநில அரசின் நடவடிக்கை அந்த ஆலையை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அந்த மண்ணுக்காக மக்களுக்காக உயிர் நீத்த 15 பேருடைய திருஉருவம் தாங்கிய மணிமண்டபம் நினைவிடம் கட்டி எழுப்பி அரசு உரிய மரியாதை வழங்க வேண்டும். மாநகர மக்களுக்கு அச்சத்தை போக்க ஒரு சில ஆலைக்கு ஆதரவாக அலைகின்ற ஒரு சில நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திறகும் கோரிக்கை வைப்போம் என தெரிவித்தனர்.