
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில், ஓட்டப்பிடாரம் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி எல்கையில் பந்தயம் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்றது.
இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்திற்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளருமான மோகன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற மன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நடுமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 50 க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் கலந்து கொண்டன. வெற்றியின் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள், சாரதி மற்றும் பின்சாரதிகளை சாலையின் இருபுறமும் நின்று பார்த்து ரசித்த பொதுமக்களும், மாட்டு வண்டி பந்தய ரசிகர்களும் ஆரவாரமிட்டு உற்சாகப்படுத்தினர். முடிவில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தினேஷ் குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாண்டி கோபி என்ற அழகிரி, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை துணைச் செயலாளர் சாமி என்ற பெரிய மோகன், தொழிலதிபர் முருகன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கலை இலக்கிய பிரிவு செயலாளர் செல்வகுமார், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜேஷ் குமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்து மாரியப்பன், குவாரி முருகன், நிலக்கிழார் கவர்னகிரி கருப்பசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் மாரி ஜெயகணேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் செந்தூரான், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் சின்னதுரை, கண்ணன், ஆறுமுகச்சாமி, செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.