• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தனியார் விடுதிகள், வணிக கடைகள் - நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு.

  • Share on

திருச்செந்தூர் சிறப்புநிலை பேரூராட்சியில் உரிய அனுமதி இல்லாமல் 2015 முதல் 2020 வரையில் தனியார் விடுதிகள் மற்றும் வணிக கடைகள் கட்டப் பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  இதை கட்டிய உரிமையாளர்கள் மீது கண்டும் காணாமல் இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

திருச்செந்தூர் சிறப்புநிலை பேரூராட்சியில் மூலம் உரிய அரசு அனுமதி இல்லாமல் திருச்செந்தூர் பகுதியில் தனியார் விடுதிகள் மற்றும் வணிக கடைகள் கட்டப்பட்டுள்ளது. இது போன்ற கட்டடங்கள் முறையான அரசு அனுமதி இல்லாமல் கட்டியுள்ள கட்டிடங்களால் அரசுக்கு மிகப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது அரசு அனுமதி இல்லாமல், வீடுகள் எல்லாம் தனியார் விடுதிகளாக மாறி வருகிறது. வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு விடுதிகள் கட்டப்பட்டு உள்ளது தெரிய வருகிறது.

ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருச்செந்தூர் சிறப்பு நிலை பேரூராட்சி மூலம் உரிய அனுமதியில்லாமல் 2015 முதல் 2020 வரை யில் கட்டப்பட்டுள்ள தனியார் விடுதிகள் மற்றும் வணிக கடைகளை நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி கட்டப்பட்டுள்ளது கண்டும் காணாமல் இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

  • Share on

தலித் அருந்ததியர் மக்கள் மீது தொடரும் வன்கொடுமை - ஆதித்தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

ரூட் கிளியர் - ஹேப்பி மூடில் ஓட்டப்பிடாரம் மோகன்!

  • Share on