
விளாத்திகுளம் அருகே மது பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து காெண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ,விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துகந்தசாமி மகன் மணிகண்டன் (34). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மதுபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் மது போதையில் குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.