• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் சன்னதி தெருவிற்கு காலையிலேயே விரைந்த ஆளும் கட்சி நிர்வாகிகள்!

  • Share on

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயலும் பாஜக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விளாத்திகுளம் சன்னதி தெரு பகுதியில் உள்ள மகளிர் தங்களது வீடுகளில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.


தமிழகத்தின் சர்வ சிக்ஷ அபியான் என்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால், மத்திய பாஜக அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய 2 ஆயிரத்து 190 கோடியை தராமல் இழுத்தடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லியில் மத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய நிதி குறித்து பேசினர். ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி தரப்படும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தாராம்.


இதனால், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.


எனவே, தற்போது மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயலும் பாஜக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கட்சிகள் பல்வேறு வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூர் கழகம் 3 வது வார்டு சன்னதி தெருவில், ஸ்டாப் இந்தி இம்போசிஷன், இந்தி திணிப்பு எதிர்ப்பு, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகங்களை வரைந்தும், பல்வேறு வண்ணக் கோலங்களை இட்டும், மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புத் தெரிவித்தனர்.


அதனை, வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் அறிவுறுத்தலின் பேரில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆலோசனையின் படி, விளாத்திகுளம் பேரூர் கழகச் திமுக செயலாளர் வேலுச்சாமி  பார்வையிட்டார். உடன் 3 வது வார்டு செயலாளர் ஸ்டாலின் கென்னடி, உறுப்பினர் ஆறுமுகச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியின் பொக்கிஷம்... யார் சார் இவர்!

விளாத்திகுளம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

  • Share on