• vilasalnews@gmail.com

தூத்துக்குடியின் பொக்கிஷம்... யார் சார் இவர்!

  • Share on

கடந்த 2016ல் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள தன்னுடைய சொந்த நிலத்தில் கின்ஸ் அகாடமி என்ற கட்டணம் இல்லா கல்வி நிறுவனத்தை தொடங்கி இந்த பகுதியில் வசித்துவரும் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு மாலை நேர டியூசன் மற்றும் மின்னொளியில் விளையாட்டுகள் முற்றிலும் இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறார்.


அதோடு சேர்ந்து வாலிபால், த்ரோபால், பேட்மிட்டன், கபடி போன்ற விளையாட்டுகளும் அகாடமியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இரவு நேரத்திலும் விளையாடும் வகையில் இங்கு மின்னொளி மைதானம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கான உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சிகளும் அகாடமியிலேயே கொடுத்து வருகிறார்.


அதற்காக அகாடமி வளாகத்திற்குள்ளேயே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் மற்றும் பார் விளையாட்டு சாதனங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


2017 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் போட்டி தேர்வுகளுக்காக முற்றிலும் இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறார். இதுவரையிலும் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் இவரது அகாடமியில் பயின்று வெற்றி பெற்று அரசு பணியிடம் பெற்றுள்ளார்கள்.


கடந்த 1996ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பு ஏற்றபோது வசதி படைத்த பொதுமக்கள் தங்கள் ரேஷன் மானியத்தை தாங்களாக விட்டுக் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த போது  அப்போது ரேஷன் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த போதும் கூட தனக்கு ரேஷன் பொருள்கள் எதுவும் வேண்டாம் என்று எழுதி கொடுத்து வெள்ளை நிற N கார்டு பெற்றார். அப்போது அவர் 600 ரூபாய் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். 2001 ஆம் ஆண்டு குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும்சேதம் ஏற்பட்ட போது ரூ. 10,000 நிவாரணம் வழங்கினார்.


2014 ஆம் ஆண்டு பாரத பிரதமராக மோடி பொறுப்பேற்ற போது வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுங்கள் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து உடனடியாக தனது சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தார். இதனால் பாரத பிரதமர் அவரை பாராட்டி அவருக்கு பாராட்டுக்கடிதம் அனுப்பி உள்ளார்.


கடந்த 2020 ஆம் ஆண்டில் நமது நாட்டில் கொரானா தொற்று ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது பாரத பிரதமர்  மோடி வேண்டுகோளை ஏற்று தான் ரூ. 51000, தனது மனைவி திருமதி. P. சாந்தி ரூ. 11,000 PM CARES நிதிக்கு கொரனா நிதி வழங்கினார்.


தூத்துக்குடி அரசு மருத்துவனையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உடற்கூறு ஆய்வு படிப்பதற்கான இறந்த மனித உடல்கள் பெரும் தட்டுப்பாடு இருப்பதை அறிந்த அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது உடலை தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு தானம் செய்தார்.


மேலும், அவரின் கல்வி சேவையை பாராட்டி 2020-க்கான டாப்டென் மனிதர்களுள் ஒருவராக ஆனந்த விகடன் வார இதழ் தேர்வு செய்தது.


மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ் உள்ளிட்ட இரண்டு சங்கங்களில் செயற்குழு உறுப்பினராகவும், தூத்துக்குடியில் லயன்ஸ் க்ளப், ரோட்டரி கிளப், ஜிம்கானா கிளப் ஆகிய கிளப்களில் உறுப்பினராக இருந்த நிலையில், இவை அனைத்திலும் இருந்து வெளிவந்து தனது கார் டிரைவரையும் நிறுத்தி விட்டு, தனது வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களையும் நிறுத்திவிட்டு, தன்னுடைய மற்ற எல்லா செலவுகளையும் குறைத்துக் கொணடு, சிக்கனமாக இருந்து, அதனால் சேமிக்கும் பணத்தை கொண்டு யாரிடமும் எந்த ஒரு உதவியோ நன்கொடையோ பெறாமல் இந்த அகாடமியை சிறப்பாக நடத்தி வருகிறார். 


இவருடைய கின்ஸ் அகாடமியில் படிக்கும் மாணவ, மாணவியர், "நாங்கள் எங்களுடைய தலைமுறையில் காமராஜ் பற்றி அறிந்தது உண்டு. ஆனால், அவரை பார்த்தது இல்லை. ஆனால், எங்களது கின்ஸ் அகாடமி நிறுவனர் மூலமாக நாங்கள் காமராஜரை பார்க்கிறோம் என வாழும் காமராஜராக போற்றி பெருமிதம் கொள்கின்றனர்". 


இத்தகைய பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் யார் தெரியுமா?


அவர்தான் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கின்ஸ் அகாடமி என்ற கட்டணம் இல்லா அரசுப் பணி போட்டித் தேர்வு பயிற்சி கல்வி நிறுவனத்தை நடத்திவரும் திரு.பேச்சிமுத்து அவர்கள்.


சமீபத்தில் தூத்துக்குடி கின்ஸ் அகாடமியின் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் நாமக்கல்லை சேர்ந்த வல்லரசு என்ற மாணவன் பயின்று வங்கி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று வரலாறு சாதனை புரிந்தார் என்பது குறிப்பிட தக்கது

  • Share on

முதல்வன் பட பாணியில் போனை போட்ட தூத்துக்குடி கலெக்டர்!

விளாத்திகுளம் சன்னதி தெருவிற்கு காலையிலேயே விரைந்த ஆளும் கட்சி நிர்வாகிகள்!

  • Share on