
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பூத் கமிட்டியில் கட்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு அதிகவாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், அதிமுகவில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் விளையாட்டு பிரிவுக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பூத் கமிட்டி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை கட்சியினருக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசும் போது, தமிழகத்தில் நிலவி வரும் மோசமான சட்டம் ஒழுங்கு பற்றியும், திமுக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரையும் விமர்சனம் செய்து மன்னராட்சிக்கு உதாரணம் திமுக என்றும், மக்களாட்சிக்கு உதாரணம் அதிமுக என்றும் பேசினார்.
இக்கூட்டத்தில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், என்.கே பெருமாள், நகர செயலாளர் மாரிமுத்து, விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ், அதிமுக நிர்வாகிகள் வரதராஜபெருமாள், வேல்முருகன், போடுசாமி, மகளிர் அணி நிர்வாகிகள் சாந்தி, பிரியா உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.