• vilasalnews@gmail.com

தலித் அருந்ததியர் மக்கள் மீது தொடரும் வன்கொடுமை - ஆதித்தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

  • Share on

தலித் அருந்ததியர் மக்கள் மீது தொடரும் ஜாதிய தீண்டாமை வன்கொடுமை, தாக்குதல், படுகொலைகளை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகை உலுக்கிய பெரும் தொற்று காலங்களில் கூட தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய வன்கொடுமை தாக்குதல்கள் படுகொலைகள் என 150க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்தேறி உள்ளது. இவை எதுவும் வெளியே அரங்கில் பேசப்படவில்லை இவர்கள் மீது நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை.

இந்த சூழலில் தலித் அருந்ததியர் மக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் படுகொலைகள் என்பது பெரிதாக பேசப்படுவதில்லை. வெளி உலகிற்கு கூட தெரிவது இல்லை மற்றும் அடையாளம் தெரியாமல் மறைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் 5 அருந்ததியர் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது வெறும் ஆதிக்க சக்தியினால் மட்டும் நடத்தப்பட வில்லை. மாறாக பட்டியலின சமூகத்தாலும் இதுபோன்று வன்கொடுமைகள் அருந்ததியர் மக்கள் மீது தொடர்ந்து நடந்தேறி வருகிறது.

மக்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டிய காவல்துறையும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அரசும்  இத்தகைய கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது.  எனவே இந்தத் தாக்குதல் படுகொலைகளை கண்டித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் வேலன் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, இதுதொடர்பான மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.இந்நிகழ்வில் போது, ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • Share on

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

திருச்செந்தூரில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தனியார் விடுதிகள், வணிக கடைகள் - நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு.

  • Share on