• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மக்களே இந்த நாள் உங்களுக்கு தெரியுமா... ஹேப்பி டே இது!

  • Share on

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு பகுதியில் பிறந்தவர் அய்யா வைகுண்டர். அவரின் இயற்பெயர் முத்துக்குட்டி என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.


அந்த காலத்தில், கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ளடங்கி இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னரின் ஆட்சியின்கீழ் சில சமூகத்தின் மீது ஒடுக்குமுறைகள் நிலவி வந்தது.


பெண்கள் மேலாடை அணியக் கூடாது. குடத்தில் தண்ணீர் பிடிக்கக் கூடாது. தெருவுக்குள் வரக்கூடாது என பல அடக்குமுறைகள் நிலவியதாக கூறப்படுகிறது.


பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கொடும் அடக்குமுறைகள் நிலவியதாகவும் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து அய்யா வைகுண்டர் மக்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் வரலாற்று ஆய்வாளர்களும் அவரை பின்பற்றுபவர்களும் கூறுகின்றனர்.


அய்யா வைகுண்டரை ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் அதிகம் வழிபடுகின்றனர். அந்த சமூகத்தினருக்கு அவர் ஓர் எழுச்சியை உருவாக்கினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முலை வரி போட்டிருக்கின்றனர். இதுதவிர, பல்வேறு வரி கொடுமைகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளாகியிருக்கின்றனர். என்னென்ன வரிகள் போட்டிருக்கின்றனர் என்பதை அவரே பாடியிருக்கிறார். வரி கொடுக்கவில்லை என்றால் அடிப்பார்கள். ‘கருப்பட்டி கேட்டடிப்பான். பனை நுங்கு கேட்டடிப்பான்’ என அய்யா வைகுண்டரே பாடியிருக்கிறார்” என்கிறார்கள்.


அத்தகைய கொடுமைகளுக்கு ஆளான மக்கள், தங்களை மீட்க வந்தவராக அய்யா வைகுண்டரை கருதி அவரை கடவுளாக வழிபடும் போக்கு தோன்றியுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக இயங்கினார் அய்யா வைகுண்டர் என்கிறார்கள் அவரை வழிப்படக்கூடியவர்கள்.


நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த வழிபாடு அகிகமாக இருக்கிறது. சென்னையில் மணலி புதூர் பகுதியில் இதற்கென வழிபாட்டுத்தலம் உள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளிலும் பெங்களூரு, மும்பையில், இடம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் சில பகுதிகளிலும் வழிபடப்படுகிறது.


சாதிக்கு அப்பாற்பட்டு இந்த வழிபாடு நடத்தப்பட்டாலும் குறிப்பிட்ட சமூகத்தினரே அய்யா வைகுண்டரை பெரும்பாலும் வழிபடுகின்றனர்.


அய்யா வைகுண்டர் வழிபாட்டில் உருவ வழிபாடு இல்லை. வழிபாட்டு தலத்தில் நிலைக்கண்ணாடியைத்தான் வைத்து வழிபடுவர். பூஜைகள், அர்ச்சனைகள் இல்லை. பலியிடுதல், தீப ஆராதனைகள் கிடையாது. விளக்கேற்றி அதன் ஒளியைத்தான் வழிபடுவர். இந்த நிலையில், அய்யா வைகுண்டசுவாமி 193 ஆவது பிறந்தநாள் விழா இந்த 2025 ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.


இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஓர் அறிவிப்பு வெளிள்ளிட்டுள்ளார்:-


அதில், தூத்துக்குடி மாவட்டம், அய்யா வைகுண்டசுவாமி 193ஆவது பிறந்தநாள் விழா மாசி மாதம் 20 ஆம் தேதி (04.03.2025) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு 04.03.2025 செவ்வாய் கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 


எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.03.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் போராட அனுமதி கிடையாது : திட்டவட்டமாக அறிவித்த காவல்துறை!!

மக்களின் வரிப்பணம் வீணடிப்பு : தூத்துக்குடி மாநகராட்சிக்கு எழுந்த கண்டனம்!

  • Share on