• vilasalnews@gmail.com

நீங்க திருந்தமாட்டீங்க... அதிரடி காட்டிய தூத்துக்குடி கலெக்டர்

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஊருக்குள் செல்லாத பேருந்துகளுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அபராதம் விதித்தார். 


இரவில் திடீரென சோதனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், பேருந்துகளை நிறுத்தி ஆய்வு செய்து, மக்களுக்காக பேருந்து ஓட்டுகிறீர்களா? ரேஸ் ஓட்டுகிறீர்களா? என ஓட்டுநர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், பேருந்துக்கள் ஊருக்குள்ள வரணும் னு மக்கள் போராட்டம் பன்னுறாங்க ஆனா நீங்க வரமாட்டீங்க, நீங்க திருந்தமாட்டீங்க, போய் அபராதத்தை கட்டுங்க என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களிடம் அதிரடி காட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. வீடியோ



தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மிக முக்கிய பகுதியாகும். இங்கு நவதிருப்பதி தலங்களில் முதல் தலமாக விளங்கும் கள்ளபிரான் கோவில், நவகைலாயங்களில் 5 வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவில் என மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்கள் அதிக அளவில் உள்ளது.

தினந்தோறும் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு தனியார் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள புதுக்குடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

இதனால், பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பலமுறை காவல்துறையினர் மற்றும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது.

இந்தநிலையில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் தூத்துக்குடி ஆட்சியர் தங்கி குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்துக்குள் பெரும்பாலான பேருந்துகள் வந்துசெல்வதில்லை என பொதுமக்கள் புகார் கூறினர். ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லாத 6 பேருந்துகளுக்கு ஆட்சியர் தலா ரூ. 10,000 அபராதம் விதித்தார். ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்துக்கு வராத பேருந்துகளின் பர்மிட் சஸ்பெண்ட் ஆகும் என ஆட்சியர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்தார். இதனால், 30 ஆண்டுகால பிரச்சனைக்கு ஒரே நாளில் தீர்வு கண்ட தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத்துக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

  • Share on

ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு போட்ட தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்!

தூத்துக்குடி அருகே ஒருவருக்கு அரிவாள் வெட்டு : வாலிபர் கைது!

  • Share on