• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி மாயமான சங்குகுளி மீனவரின் உடல் கரை ஒதுங்கியது!

  • Share on

தூத்துக்குடியில் சங்குகுளிக்க கடலுக்கு சென்றபோது மாயமான வாலிபர் நேற்று ( பிப்.,19) வீரபாண்டிபட்டினம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


தூத்துக்குடி குரூஸ்புரத்தை சோ்ந்த டேனியல் மகன் சாம்சன்(20). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ், கில்டன் ஆகியோருடன் கடந்த 17ஆம் தேதி காலையில் நாட்டுப்படகில் சங்கு குளிப்பதற்காக சென்றாராம். கரையில் இருந்து சுமாா் 10 கடல்மைல் தொலைவில் சங்கு குளித்துக் கொண்டிருந்த போது, சுரேஷ், கில்டன் ஆகியோா் கடலுக்குள் சென்று சங்கு எடுத்துக் கொண்டு வெளியில் வந்தபோது, படகில் இருந்த சாம்சனை காணவில்லையாம். 


இதனால், சாம்சன் கடலில் தவறி விழுந்திருக்கலாம் என தெரிகிறது. இதனால் அவா்கள் அந்தப் பகுதியில் தேடிப் பாா்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவா்களும் அந்தப் பகுதியில் தொடா்ந்து மீனவா் சாம்சனை தேடினர். இதுகுறித்த தகவலின் பேரில், தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். 


இந்நிலையில், நேற்று ( பிப்.,19 ) மாலை திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய கட்டணம் கடற்கரையில் வாலிபர் சடலம் கரை ஒதுங்கி கிடப்பதாக திருச்செந்தூர் மரைன் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அது, பிப்., 17ஆம் தேதி தூத்துக்குடியில் காணாமல் போன சங்கு குளித்தொழியாளி சாம்சன் என்று தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்து இறந்தது சாம்சன்தான் என்று உறுதி செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்

  • Share on

கேரள வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு!

ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு போட்ட தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்!

  • Share on