• vilasalnews@gmail.com

கேரள வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத் தில் ரயில் பயணியிடம் சுமார் 58 பவுன் நகைகள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எரிச்சம் ஹவுஸ் பகு தியைச் சேர்ந்தவர்  சாகுல் ஹமீது (45). இவர், கடந்த 2019ம்  ஆண்டு தூத்துக்குடி - கோயம்புத்தூர் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற ஒரு பயணி வைத்திருந்த சுமார் 58 பவுன் நகையுடன் இருந்த பையை திருடிச் சென்றுவிட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி ரயில்வே போலீசாரால் அவர் கைது செய்யப் பட்டார்.

 

இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் 4வது ஜூடியசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட சாகுல் ஹமீதுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

  • Share on

விளாத்திகுளத்தில் வியாபாரிடம் ரூ. 2 லட்சம் பணத்தை அபேஸ் செய்த மர்மநபர்கள்!

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி மாயமான சங்குகுளி மீனவரின் உடல் கரை ஒதுங்கியது!

  • Share on