• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் வியாபாரிடம் ரூ. 2 லட்சம் பணத்தை அபேஸ் செய்த மர்மநபர்கள்!

  • Share on

விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் ( 70 ). இவர் சிறுதானியம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 


இந்த நிலையில், நேற்று ( பிப்.,19 ) விளாத்திகுளம் எட்டயபுரம் சாலையில் உள்ள வங்கியில் ரூபாய் 2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பைக்கின் முன் பகுதியில் வைத்துள்ளார்.


அங்கிருந்து சத்யா நகரில் உள்ள சாக்கு கடைக்கு சென்று உள்ளார். அப்போது அவரை அழைத்த மூன்று பேர் உங்களது சட்டையின் பின்புறம் சேறு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் கணேசன் பைக்கை நிறுத்திவிட்டு அருகே உள்ள கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டில் வாங்கி தனது சட்டையை சுத்தம் செய்துள்ளார். பின்னர் பைக்கை எடுக்க வந்த போது அதில் வைத்திருந்த பணப்பையை காணவில்லை. அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.


பின்னர் இதுகுறித்து அவர் விளாத்திகுளம் போலீசில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவப் பகுதியை பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


கணேசன் வங்கிக்கு சென்றது முதல் பின் தொடர்ந்து வந்து அவரது சட்டையில் சேற்றை தெளித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி பேச்சு கொடுத்து பணத்தை மர்மநபர்கள்  அபேஸ் செய்து தப்பி இருக்கலாம் என்று சந்தேகமும் எழுந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வியாபாரியிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் விளாத்திகுளத்தில் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் நீதிபதி கார் முன்பு அரிவாளுடன் போஸ் கொடுத்த வாலிபர் கைது!

கேரள வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு!

  • Share on