• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நீதிபதி கார் முன்பு அரிவாளுடன் போஸ் கொடுத்த வாலிபர் கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.


அப்போது,  பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நீதிபதி ஒருவரது கார் முன்பு அரிவாளுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு  போஸ் கொடுத்து பதிவு வெளியிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதுகுறித்து அவர் நீதிபதி அனுமதியின் பெயரில் தூத்துக்குடி தெனபாகம் போலீசில் புகார் செய்தார் . பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இதில் தூத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்த விஜயன் மகன் வினோத்குமார் ( 22 ) என்பவர் இந்த பதிவை வெளியிட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதிகள் குடியிருப்பில் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு யாரும் அறியாத வண்ணம் நீதிபதி ஒருவரது கார் முன்பு அரிவாளுடன் நின்று போட்டோ எடுத்துள்ளார் பின்னர் அதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பது தெரியவந்தது.


பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் போட்டோ பதிவிட்டதாக வழக்கு பதிந்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர். கைதான வினோத்குமார் மீது அடிதடி உள்ளிட்ட மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வினோத்குமார் சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமில் வெளியே வந்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடியில் ஆடுகளை விழுங்கும் மலைப்பாம்புகள்!!

விளாத்திகுளத்தில் வியாபாரிடம் ரூ. 2 லட்சம் பணத்தை அபேஸ் செய்த மர்மநபர்கள்!

  • Share on