கோவில்பட்டியில் உள்ள நாடார் மேல்நிலைபள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட அமைச்சருக்கு மலர் கீரிடம் சூட்டப்பட்டது. வேல் வழங்கப்பட்டது.
மக்களின் பாராட்டுகளை ஏற்று கொண்ட பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில்:
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மன நிறைவுடன் பணியாற்றிட வேண்டும் என்பதை விட மனக்குறையுடன் மக்கள் வரக்கூடாது என்ற எண்ணத்துடன் பணியாற்றினேன். 2வதுமுறையாக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் போது தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 2வது முறை போட்டியிட முதலில் வாய்ப்பு கிடைக்கமால் போன போது, சீட் கிடைக்கமால் இருந்ததை விட 2 வது குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது.2016 சட்டமன்ற தேர்தலில் தெய்வத்தினால் தப்பித்து பிழைத்தேன். குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். கோவில்பட்டி மக்கள் அனைவரும் ஒரே சமுதாயம் என்ற உணர்வுடன் தான் பணிகளை செய்து உள்ளேன். அது பணிகளை செய்ய உந்துதலாக இருந்தது
கடந்த 10 ஆண்டுகளில் நான் என்னை தேடி வரும் மக்களிடம் எந்த சாதி என்று கேட்டத்தில்லை, மறைமுகமாக கேட்க கூட நான் சங்கடப்பட்ட காலம் உண்டு.கோவில்பட்டி சட்டமன்றத்தில் உள்ள 2லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்களும் என்னை பொறுத்த வரை ஒரே சமுதாயம் என்ற நிலைப்பாட்டில் மனதினை ஒரு நிலைப்படுத்தி பணிகளை செய்தேன். நான் அமைச்சரானதை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அமைச்சாரன பிறகும் எம்.எல்.ஏ.வாக இருக்கும் போது என்ன நிலையில் இருந்தனோ, அதை நிலையில் தான் இருந்தேன்.
அமைச்சரானதும் மக்களின் எதிர்ப்பு இருக்கும் அதை நாம் செய்ய வேண்டும் என்ற உணர்வு தான் இருந்தது. மேலும் கோவில்பட்டி 2 வது குடிநீர் திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் வந்தது. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் என்ற அந்தஸ்தினை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இந்த ஆட்சி நீடிக்குமா, தாங்குமா என்ற எண்ணம் மக்களை போன்று எங்களுக்கும் இருந்தது என்றும், 18 எம்.எல்.ஏ. ஒரு புறம் போனார்கள், 11 எம்.எல்.ஏக்கள் இன்னொரு புறம் போனார்கள் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இந்த ஆட்சி போய் விடும் என்று கூறினார்கள்.
ஏனென்றால் அது போன்ற சூழ்நிலை என்றும், ஒவ்வொருத்தரையும் பிடிச்சு வைத்து கூவத்தூரில் பட்டபாடு பெரிய பாடு என்றும், தெய்வாதீனமாக நாடாளுமன்ற தேர்தலுக்க பின்னர் தான் ஒரு நிலைப்பாட்டில் நிலைத்த ஆட்சியாக நீடித்த ஆட்சியாக மாறியது. அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்ட வேண்டும்.
எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல், அறிவு முதல்வரிடம் உள்ளது. இதற்கு முன் தேர்தல் வந்தால் வேறு யாரும் வெற்றி பெறக்கூடிய நிலை இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் முதல்வரின் நிலைப்பாடு, நிர்வாக திறன் காரணமாக அதிமுக வெற்றி பெறும் நிலைக்கு நிறுத்தியுள்ளார்.
2 வது குடிநீர் திட்டம் கோவில்பட்டி நகருக்கு வரப்பிரசாதம் என்றும்,248 கிராம மக்களுக்கான குடி நீர்திட்டத்தினை நாளை மறுநாள் முதல்வர் காணொலி மூலமாக மக்களுக்கு அர்பணித்து வைக்கிறார். இதன் மூலமாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 131 கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் கிடைக்கும்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேட்ட திட்டங்களை கொடுத்தார். அதே போன்று தான் தற்பொழுதைய முதல்வரும் தருகிறார். ஆகையால் தான் மக்கள் பாராட்டும் அளவிற்கு பணிகளை செய்ய முடிந்தது.
நான் ஆன்மீகத்தினையும், நேரம் காலத்தினையும் நம்பக் கூடியவன். நேரம், காலம் நன்றாக இருந்தால் மீண்டும் போட்டியிட ஒரு வாய்ப்பு வரும் என்றும், இல்லையென்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நான் செய்த பணிகள் காரணமாக யாரை நிறுத்தினாலும், அதிமுக நூற்றுக்கு நூறு வெற்றி பெறும் என்றும், கோவில்பட்டி சட்டமன்றத்தில் உள்ள 131 கிராமங்களில் எனது அடையாளம் இல்லாத கிராமங்கள் இருக்காது. அந்த அளவிற்கு ஒவ்வொரு கிராமத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் ஒரு அரசு திட்டம் கிடைத்துள்ளது. மக்களுக்கு செய்த பணிகள் காரணமாக மனநிறைவு உள்ளது.
கோவில்பட்டி நகருக்கு நர்சிங் கல்லூரி கொண்டுவருதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமையும் சூழ்நிலை உள்ளது.எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் கூறினாலும், மக்களால் குற்றச்சாட்டு சொல்லத அளவிற்கு திறமையான, எளிமையான முதல்வரை பெற்றுள்ளோம். இடையில் பிரச்சினைகள் இல்லாமல் இருந்திருந்தால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருப்போம் என்றும், தாமிரபரணி - வைப்பார் திட்டத்திற்கு நில எடுப்ப பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறும் பெறும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், பம்பை ஆறு - வைப்பாறு இணைக்கும் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. வரும் தேர்தலில் இதனை தேர்தல் அறிக்கையாக வைக்க உள்ளோம் என்றும்,
கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய்துறை தூத்துக்குடி மாவட்டத்திலும், உள்ளாட்சித்துறை தென்காசி மாவட்டத்தில் இருக்கும் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்படும் என்றும், விளாத்திகுளத்தினை தலைமையிடமாக கொண்டு கோட்டம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே 3 தொகுதி, 2 கோட்டம், 5 ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கி கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்கும் திட்டங்களை மனதில் வைத்து இருக்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் கோவில்பட்டியில் உள்ள அனைத்து மக்கள் ஒற்றுமையாக இருந்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லமால் இருந்தது. வரும் சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று மனதில் நினைத்துள்ள பணிகளை நிறைவு செய்து விட்டு, அடுத்தவருக்கு வழி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உள்ளேன். 3 வது முறை வெற்றி பெறுவது மக்கள் கையில் தான் உள்ளது. இதற்கு அடுத்த தேர்தலில் அதிமுக சேர்ந்த வேறு ஒருவர் தான் போட்டியிடுவர் என்றும் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்ற வேறுபாடு இல்லமால் கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து சமுதாய மக்கள், அனைத்து அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்புவுடன், எவ்வித பிணக்குகள் இல்லாமல் இருந்ததை சாதனைகளை விட பெரிதாக நினைக்கிறேன். 10 ஆண்டுகாலம் மனநிறைவுடன் இருந்தேன் என்ற ஒன்றே போதும் என்றார்.