• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது - எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில்  கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்  சம்பந்தப்பட்ட எதிரிகள் 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

  கடந்த 20.10.2020 அன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் காட்டு பகுதயில், தூத்துக்குடி மில்லர்புரம்  என்.ஜி.ஓ காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன் (31) என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகளான முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ் (28) மற்றும் அவரது நண்பர்களான முத்துக்குமார் (19), நவீன் (20), ஆரோக்கிய செல்வம் (20)  ஆகியோரை கைது செய்தனர். 

இவ்வழக்கின் முக்கிய எதிரியான சுந்தர்ராஜ் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன்னும்,

கடந்த 22.10.2020 அன்று  கயத்தார் பஜார் பகுதியில், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் ஊர்காவலன் (61) அவரது மகன் பசுபதி பாண்டியன் (20) ஆகியோர் ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான ஊர்காவலன் மற்றும்  பசுபதி பாண்டியன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து வும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி, காவல் ஆய்வாளர்களின்  அறிக்கையின் அடிப்படையில் 3 எதிரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், மாவட்ட ஆட்சியர்  செந்தில் ராஜ், மேற்படி எதிரிகளான 1) முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ் 2) கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் ஊர்காவலன் 3) கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த ஊர்காவலன் மகன் பசுபதி பாண்டியன் ஆகிய மூன்று எதிரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் 3 எதிரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

  • Share on

வாக்காளர் பட்டியலில் திருத்தம் : ஓட்டப்பிடாரம் தொகுதியில் சிறப்பு முகாம் விறு விறு!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் : மாவட்ட ஆட்சியர் தகவல்

  • Share on