• vilasalnews@gmail.com

தூத்துக்குடி - பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் திடீர் மாற்றம்!

  • Share on

திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம் வழியாக பாலக்காட்டுக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை திருநெல்வேலியில் இருந்து துறைமுக நகரமான தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 


இந்நிலையில் கடந்த ஆண்டு ரயில்வே வாரியம் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் முதல் முறையாக தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு பொதுமக்களும் ரயில் பயணிகளும் நன்றி தெரிவித்தனர்.


இந்த நிலையில், ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அவனீஸ்வரம் - கொட்டாரக்கரை - குந்தரா இடையே ரயில்வே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


1. ரயில் எண்.16791 தூத்துக்குடி - பாலக்காடு இடையிலான பாலருவி எக்ஸ்பிரஸ், 19.02.2025 மற்றும் 28.02.2025 அன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். 


2. ரயில் எண். 16792 பாலக்காடு சந்திப்பு - தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ், 19.02.2025 மற்றும் 28.02.2025 அன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டு கொல்லம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • Share on

கள்ளவாண்ட சுவாமி கோவில் கொடை விழா விவகாரம் : சமாதான கூட்டத்தில் உடன்பாடு

விளாத்திகுளம் அருகே பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான 8 வயது சிறுமி : 20 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on