
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் கள்ளவாண்ட சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கொடை விழா நடத்துவது குறித்து இரு தரப்பினரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரத்னா சங்கர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கோவில் கொடை விழாவில் சாமி ஆடிவரும் பெருமாள் என்பவரே அவரது காலம் வரை தொடர்ந்து சாமி ஆடுவார். அவரை யாரும் தடுக்கக்கூடாது. கோவில் நிர்வாகம் 216 வாரிசுதாரர்களின் பட்டியல் தயார் செய்து, அதில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அதன்படி வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி ஊர் கூட்டம் நடத்திட வேண்டும்.
அதில் பெருவாரியான வாரிசுதாரர்களின் முடிவு படி கோவில் கொடை விழாவினை நடத்திட வேண்டும். காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதனை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த சாமாதான கூட்டத்தில், வருவாய் ஆய்வாளர் மகாராஜன், விஏஓ ராஜ்குமார், காவல்துறையினர் மற்றும் இரு தரப்பினர் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.