
ஓட்டப்பிடாரம் அருகே ராஜாவின் கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஞானதுரை மகன் பிரவீன் செல்வக்குமார் ( 25 ). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
அதே கிராமத்தில் சேர்ந்தவர் இம்மானுவேல் விஜய சீலன் ( 26 ). இவருக்கும் பிரவீன் செல்வக்குமாருக்கும் இடையே பொங்கல் விழா விளையாட்டு நிகழ்ச்சியின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன் விரோதத்தில் நேற்று இம்மானுவேல் விஜய சீலன் புதியம்புத்தூர் காமராஜர் நகரச் சேர்ந்த ஆர்த்தி ( 26 ) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து டி குமாரகிரி அருகே பைக்கில் வந்த பிரவீன் செல்வக்குமாரை வழிமறித்து தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர்
இதில் பிரவீன் செல்வக்குமாருக்கு இடது கை மணிக்கட்டுப்பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.