• vilasalnews@gmail.com

தூத்துக்குடிக்கு வந்தது உத்திரகாண்ட் கங்கை நீர்!

  • Share on

மகாசிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை நடைபெற்று வருகிறது. 


இது தொடர்பாக அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர்(பொறுப்பு) சி.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


உத்திரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நதி நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது. 


இந்த கங்கை நீர் பாட்டில்களின் சிறப்பு விற்பனை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதத்தில் வருகின்ற மகாசிவராத்திரியை முன்னிட்டு பொதுமக்கள் இப்புனித நீரை எளிதில் பெறும் வகையில் கங்கை நதி நீர் சிறப்பு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


250 மி.லி அளவு கொண்ட ஒரு பாட்டில் கங்கை நதி நீர் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுப நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குதல், புதுமனைப்புகுதல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share on

திருச்செந்தூா் அருகே சாராயம் காய்ச்சிய 2 போ் கைது!

ஓட்டப்பிடாரம் அருகே நில மோசடி புகார் : சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு!

  • Share on