• vilasalnews@gmail.com

திருச்செந்தூா் அருகே சாராயம் காய்ச்சிய 2 போ் கைது!

  • Share on

திருச்செந்தூா் அருகே சாராயம் காய்ச்சியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சாராயம் மற்றும் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே மானாடு சுந்தரபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் திருச்செந்தூா் தாலுகா போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சுந்தரபுரம் அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் (38) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றபோது, அங்கிருந்த 3 போ் போலீசாரை கண்டதும் தப்பிஓட முயன்றனா். 


அவா்களில் இருவா் போலீசாரிடம் பிடிபட்டனா். பிடிபட்டவா்கள் செல்வகுமாா் மற்றும் அதே ஊரை சோ்ந்த ஜெயமுருகன் (42) என்பதும், தப்பி ஓடியவா் அதே பகுதியைச் சோ்ந்த சிவபெருமாள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவா்கள் 3 பேரும், சாராயம் காய்ச்சியுள்ளனா். அவா்களிடமிருந்து 400 மிலி சாராயம் மற்றும் 20 லிட்டர் கேன், அலுமினிய பாத்திரம், சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இதுகுறித்து உதவி ஆய்வாளா் முத்துசெல்வம் வழக்குப்பதிவு செய்தாா். ஆய்வாளா் இன்னோஷ்குமாா் விசாரணை நடத்தி செல்வகுமாா், ஜெயமுருகன் ஆகியோரை கைது செய்தாா். மேலும் தப்பி ஓடிய சிவபெருமாளை போலீசார் தேடி வருகின்றனா்.

  • Share on

வல்லநாட்டில் திமுகவிற்கு பதிலடி கொடுத்த பாஜக!

தூத்துக்குடிக்கு வந்தது உத்திரகாண்ட் கங்கை நீர்!

  • Share on