
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக கூறி, திமுக சார்பில் மாநிலம் முழுதும் கடந்த கண்டன பொதுக்கூட்டங்கள் நடந்தப்பட்டது.
சென்னையை அடுத்த ஆவடியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு மீது குற்றம்சாட்டி பேசினார். இதேபோல், மற்ற மாவட்டங்களில் நடந்த கூட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் உள்ளிட்ட திமுகவினர், மத்திய அரசையும், மத்திய பட்ஜெட்டையும் கண்டித்து பேசினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக தலைமை அறிவுறுத்தியதின் பேரில்,
பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் வல்லநாட்டில் வைத்து நடைபெற்றது .
ஒன்றிய தலைவர் பேச்சிமுத்து தலைமையிலும், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் பிரபு முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் ஒன்றிய தலைவர் நங்கமுத்து, ஆன்மீக பிரிவு மாவட்டச் செயலாளர் பரமசிவம், ஊடகப்பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சீனிவாசன், பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் தம்பா,
விவசாயி மாவட்ட செயலாளர் பேச்சி, அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் முருகன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் சுரேஷ், கிளைத் தலைவர்கள் மீனாட்சி சுந்தரம், கணேசன், ஒன்றிய நிர்வாகிகள் சுந்தர்ராஜ், மாரி கனகராஜ், அருண்குமார், சித்திரைகுமார், தம்பான், முருகன், குகன், மாரியப்பன், வெள்ளைச்சாமி , சுடலைமுத்து, கிருஷ்ணவேணி, ஆறுமுகத்தாய், மந்திர லட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.