• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்!!

  • Share on

தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் வருகிற 22ஆம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரி இணைந்து, வேலைதேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் 22.02.2025 அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.


இதில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி, B.E, Diploma, Nursing, ITI படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். 


இந்த முகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Thoothukudi Employment Office என்ற Telegram Channel -ல் இணையவும். இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deo.tut.jobfair@gmail.com அல்லது தொலைபேசி எண் 0461-2340159 ஐ தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம். மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் TamilNadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் வேலைநாடுநர்கள் எனில் CANDIDATE LOGIN இல் பதிவுச்செய்யவும், வேலையளிப்பவர்கள் (EMPLOYER) எனில் EMPLOYER LOGIN-இல் கட்டாயம் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

படுமோசமாக தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு... உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு!

எட்டயபுரம் அருகே விவசாயிக்கு நேர்ந்த சோகம்!

  • Share on